top of page
Search
  • Writer's pictureDr Rahuls Elder Care

கோவிட்-19 சூழ் உலகத்தில், வயது முதிர்ந்தோர் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி?

Updated: Jun 13, 2020



இந்த கோவிட்-19 மேலும் சில வருடங்களுக்கு நம்முடன் இருக்கப்போகிறது.இது WHO,CDC போன்ற ஆகப்பெரும் உலக நிறுவனங்கள் ஒப்புக்கொண்ட நிதர்சனமாகும். அனைவருக்கும் தடுப்பு மருந்து கொடுப்பது நிச்சயம் நமக்கு சாதகமாக இருக்கும் என்றாலும் அதை செய்து முடிக்க இன்னும் மூன்று முதல் ஐந்து வருடங்கள் ஆகலாம்.

கோவிட்-19 ஆல் ஏற்படும் மரணங்கள் மற்றும் உடல்நல கோளாறுகள், மற்ற உடல் உபாதைகளால் ஏற்படும் மரணங்களை விட அதிகமானதாக இல்லை.


WHO,CDC,ICMR போன்ற நிறுவனங்களின் கருத்துப்படி வயது முதிர்ந்தோரிடம் கோவிட்-19 பாதிப்பு நிலை என்பது தெளிவானதாக கூறப்படவில்லை.


கோவிட்-19 ன் பாதிப்பு விகிதம் மற்ற உடல் உபாதைகளான சக்கரை நோய்,இருதய நோய் ஆகியவற்றின் பாதிப்பு விகிதத்தை ஒத்தே இருக்கிறது மேலும் நாள் முற்றிய நோய்களும்,தொற்றுகளும் கோவிட்-19 ன் மோசமான விளைவுகளுக்கு துணை போகின்றன.

இதனாலேயே தீவிர நோய்வாய்ப்பட்ட முதியோர் கோவிட்-19 இடம் மேலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.


புதியபாதை


பிறகு என்ன செய்வது?


தடுப்புகளை களைந்துவிட்டு இந்நோயுடன் இயைந்து வாழத்தான் வேண்டுமா?


நிச்சயம் இல்லை.


கோவிட்-19 ஐ நம்மால் கணிக்க இயலவில்லை.இது ஒரு நோயா இல்லை நுண்ணுயிரியா என்று முழுதாக பிடிபடவில்லை.இதற்கான மருத்துவ முறையும் சரியாக வடிவமைக்கப்படவில்லை.


நமக்குத் தெரிந்ததெல்லாம் பாதுகாப்பாக இருந்தால் இதை தவிர்க்கலாம் என்பது மட்டுமே.

இப்போது இருப்பதுபோல் உலகக் கதவுகளை அடைத்துக்கொண்டு எப்போதும் நம்மால் இருக்க முடியாது.

பெரியவர்களின் முழு உடல் நலத்தை கருத்தில் கொண்டு இந்த வைரஸை எதிர்க்கும் புதிய பாதையை நாம் கண்டறியத்தான் வேண்டும்.


7 அடுக்கு பாதுகாப்பு வழிமுறைகள்


அடிப்படைகள்!


கோவிட் - 19 தும்மல் மற்றும் இருமலினால் வெளியேறும் நீர்த்துளிகளின் மூலம் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுகிறது.


இது இரண்டு வகையில் நடக்கலாம்.


1.நேரடி பாதிப்பு:-கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டவரை ஒரு மீட்டர் இடைவெளியில் சந்தித்தால்,மேலும் அவர் முகத்தை மூடாமல் தும்மவோ,இருமவோ செய்தால் தொற்று உண்டாகக்கூடும்.


2.மறைமுக பாதிப்பு:-தொற்று ஏற்படுத்தக்கூடிய நீர்த்துளிகள் தளங்களிலும்(surface),நாம் அணியக்கூடிய உடைகளிலும் பல நாட்கள் தங்கும் வலிமை கொண்டது.

தொற்று உள்ள இடங்களை தொட்டுவிட்டு கண்,மூக்கு,வாய் ஆகியவற்றை தொடுவதன் மூலமும் நமக்கும் தொற்று ஏற்படலாம்.


  • கைகளை அடிக்கடி சோப் மற்றும் நீரால் 20 நொடிகள் கழுவ வேண்டும்

  • கைகளால் முகத்தை தொடுவதை தவிருங்கள்

  • அடிக்கடி தொடும் இடங்களை சுத்தம் செய்யுங்கள்.


இந்த பாதிப்பின் அபாயத்தை எப்படி குறைப்பது?


  • அனாவசியமாக டாக்டரிடம் செல்ல வேண்டாம்.

  • அவசரமில்லாத சிகிச்சைகள்,வருடாந்திர மருத்துவ சோதனைகள் போன்றவற்றை இதுபோன்ற சூழ்நிலையில் தவிர்க்கலாம்.

  • வழக்கமான மருத்துவ சோதனைக்கு செல்லும்முன் உங்கள் மருத்துவமனையில் டெலி - மெடிசின் சேவை உள்ளதா என்று விசாரிக்கவும் முடிந்தால் நேரடி சந்திப்பை தவிர்த்து இமெயில் வீடியோ காலிங் மூலம் தொடர்பு கொள்ளவும்.




உடல்நலம் பேணுதல் -நடைப்பயிற்சிக்கு தடை


  • ஒன்றுக்கு மேற்பட்ட உடல் உபாதைகளால் வீட்டில் அடைபட்டிருக்கும் முதியோர் நாற்காலி உடற்பயிற்சிகள், ரெசிஸ்டன்ஸ் பயிற்சிகள் போன்றவற்றை Therabands உதவியுடன் செய்யவேண்டும்.



  • கீழே தவறி விழும் ஆபத்து இருக்கும் பெரியவர்கள் மற்றவர் கண்காணிப்பில் இந்த பயிற்சிகளை செய்யலாம்.

  • மூட்டு தேய்மானம் உள்ளவர்களுக்கு யோகா மற்றும் உடற்பயிற்சி.

  • வீட்டுவாசலில் நடைபாதை அமையப் பெற்றவர்கள் தினமும் நடைபயிற்சி மேற்கொள்ளலாம்

  • வெளியே செல்லும் முன் வாய்,மூக்கு ஆகியவற்றை நன்கு மறைக்கும் முகமூடி அணிய மறக்காதீர்கள்.

  • லிப்ட் மற்றும் கைப்பிடிகளைத் தொட நேருமாயின்,ஒரு முறை பயன்படும் கையுறைகளை அணியவும்.பிறகு சரியான முறையில் அதை குப்பை தொட்டியில் போடவும்.

  • திரும்பிய பின் சோப் மற்றும் நீரால் கைகளை நன்கு கழுவவும்.

  • கூட்டமான நடைபயிலும் இடங்களை தவிர்க்கவும்.

  • நேரம் தவறாமல் மருந்து எடுத்துக் கொள்ளுங்கள் தேவையான அளவு மருந்துகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்

  • மருத்துவரின் பரிந்துரைப்படி பிபி,சர்க்கரை அளவு ஆகியவற்றை சுயபரிசோதனை செய்து கொள்ளவும் இன்றைய நாளில் மிகவும் தரமான பரிசோதனை கருவிகள் இணையத்தில் அமேசான் ஃப்ளிப்கார்ட்போன்றவை மூலம் வாங்க முடியும்.

  • சரி விகிதத்தில் உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.ஆறு மாதத்துக்கு ஒரு முறை உணவு நிபுணரை தொடர்பு கொண்டு தங்கள் உணவு பழக்கத்தை சரி பார்ப்பது அவசியம் மேலும் மாதம் ஒருமுறை தங்கள் எடையை சரிபார்க்கவும்.

  • கீழே விழுதல் அல்லது எலும்பு முறிவு என்பது இப்படியான காலகட்டத்தில் மிகவும் துயரமான ஒன்று கீழே விழாமல் இருக்க பாதுகாப்பு வழிமுறைகளை உறுதி செய்து கொள்ளுங்கள்.


சமூக நலம் பேணுதல் -இணையத்துடன் இணைந்திருங்கள்


  • சுற்றத்தோடு இணைந்திருப்பது நம்மை நல்ல மனநிலையிலும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க உதவும் ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் வயது முதிர்ந்தோர் வீட்டினுள்ளேயே இருப்பது நல்லது.



  • உறவினர்,நண்பர் யாரும் சந்திக்க வந்தால் அவர் முழு நேரமும் முகமூடி அணிவதை உறுதி செய்யவும்.உள்ளே வந்தவுடன் மற்றும் திரும்பி செல்லும் முன் கைகளை கழுவ சொல்லவும்.

  • உற்றார்-உறவினருடன் ஃபேஸ்புக்,ஸ்கைப்,வாட்ஸ்அப் ஆகிய இணைய சேவைகளின் உதவியுடன் இணைந்திருங்கள்.

  • இணையத்தின் மூலம் சமூக நல கூட்டங்களுடன்(support groups) தொடர்பில் இருங்கள்

  • இந்த சமூக விலகலால் தனிமையில் வாடும் முதியோர் மனநல ஆலோசகரின் உதவியை நாடலாம்.


மன நலம் பேணுதல் -நேர்மறை எண்ணங்கள் மட்டுமே!

  • தனியாகவோ சிறு குடும்பமாகவோ வாழ்பவருக்கு சுற்றத்தாரோடு பழக இயலாத நிலையில் மனச்சோர்வு ஏற்படலாம்.தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் படபடப்பு,தூக்கமின்மை ஆகியவையும் ஏற்பட வாய்ப்புள்ளது

  • இந்த சர்வதேச பரவல் (Pandamic)சூழ்நிலையில் பயம்,படபடப்பு,மன அழுத்தம் ஆகியவை ஏற்படுவது இயல்பு.நேரடி உதவிகள் கிடைக்காத நிலையில் தொலைத்தொடர்பு மூலம் தங்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வது உகந்ததாகும்.



  • ஏற்கனவே மன அழுத்தம் பிரச்சனை கொண்டு ஆதரவு கூட்டங்கள் மனநல ஆலோசனை பெற்று வந்தவர்களுக்கு இந்த நிலை மிகவும் கடினமானது ஆகும்

  • நமக்கு பிடித்த வேலைகள் மற்றும் பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது நல்ல மனநிலையில் இருக்க உதவும்.

  • நேர்மறை சிந்தனைகள் மற்றும் பிடித்தவற்றை செய்வது மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

  • நண்பர்களுடன் உறவினர்களிடம் தொலைபேசியில் பேசுங்கள்.அண்டை வீட்டாருடனும் சுற்றத்தாருடனும் சமூக விலகலோடு பேசுங்கள்.

  • இணைய ஆதரவு கூட்டங்களில் இணைந்திருங்கள்


திறமைகளைப் பேணுதல் -புதிதாய் ஏதேனும் கற்கலாம்!


  • நாம் வீட்டிலேயே அடைபட்டு இருக்கவில்லை.இத்தனை நாள் கிடைக்காத பொன்னான நேரம் நமக்கு கிடைத்திருக்கிறது.பல புதிய விஷயங்களை கற்க இது மிகச் சரியான நேரம்.

  • எனக்கு தெரிந்த பல முதியவர்கள் மாடித்தோட்டம் இடுவதில் வல்லுனராகி வருகின்றனர்



  • ஆன்லைனில் பல இலவச பயிற்சிகள் உள்ளன...

a. வெளிநாட்டிலிருந்து மகன் பரிசளித்து என்ன செய்வதென்று தெரியாமல் புத்தம் புதிதாய் வைத்திருக்கும் அந்த டிஜிட்டல் கேமராவை இயக்கக் கற்றுக்கொடுக்கும் வீடியோக்கள்


b. பேத்திகள் ஆசைப்படும் பெயர் தெரியாத மேலைநாட்டு உணவு வகைகளின் செய்முறை விளக்க வீடியோக்கள்... மேலும் பல!

  • புதியன கற்கும்போது நமது மூளை மனது ஆகியவை எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குகின்றன.

  • வேலையில் இருக்கும் பெரியவர்கள் வீட்டிலிருந்தே (WORK FROM Home)வேலை பார்ப்பது நல்லது.




அறிவுசார் நலம்பேணுதல் -மூளையை பலப்படுத்துவது எப்படி?


இந்த Pandemic ன் சமூக விலகலால் வயது முதிர்ந்தோர்க்கு அறிவாற்றல் வீழ்ச்சி,மன அழுத்தம்,படபடப்பு போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது.

  • அறிவாற்றல் பேணுதல் என்பது மூளையை நல்ல செயல்பாட்டில் வைத்திருத்தல் மற்றும் மறதி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுதல்.



  • மூளையைசுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள சுடோகு,குறுக்கெழுத்துப் புதிர்,படம் வரைதல்,புத்தகம் படித்தல்,புதிய விஷயங்களை கற்றல் போன்றவற்றை செய்யலாம்.

  • ஏற்கனவே ஞாபகமறதி இருக்கும் முதியோருக்கு இந்த புதிய வாழ்க்கை முறை குழப்பமாக இருக்கலாம்.தினசரி வேலைகளுக்கான நல்லதொரு அட்டவணை அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.



ஆன்மீகம் பேணுதல் -மெய்ஞான பரிணாமம்


கோவிட்-19 ன் சவால்களை எதிர்கொள்ள முதியோர்க்கு பெரிதும் தோள் கொடுப்பது ஆன்மிக சிந்தனைகள்.


ஆன்மீகம் என்பது மதம் சார்ந்தது மட்டுமல்ல அது ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கை முறையாகும் ஆன்மீக கூட்டங்களுடன் தொலைத் தொடர்பில் இருப்பது இதுபோன்ற சூழ்நிலையில் மிகவும் நிம்மதி தரும்.

வயது முதிர்வால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளும் அவை சார்ந்த மன உளைச்சலுக்கும் மெய்ஞானம் பதில் தரும்.



  • தங்களுக்கு தெரிந்த ஏதேனும் ஒரு பிரார்த்தனையைச் செய்யுங்கள்-பாடல்கள் ,பஜனைகள்,நன்றி உணர்வு...

  • இந்த தனிமை என்பது பல காலமாக நம்மை அழுத்திய பொறுப்புகள் இன்றி ஓய்வெடுக்கும் நேரம்.எத்தனையோ வருடங்களுக்கு முன் பேசாமல் விட்ட பழைய நட்புகளை இப்போது புதுப்பிக்கலாம்.

  • தியானம் மூச்சுப் பயிற்சி ஆகியவை உடலுக்கும் மனதுக்கும் மிகவும் இனிமையாக இருக்கும்


சுற்றுசூழல் நலம் பேணுதல் -பாதுகாப்பாக இருங்கள்


சுற்றுச்சூழல் நலம் என்பது தேவையான பாதுகாப்புடன் இருப்பதே ஆகும்



  • எல்லாத் தளங்களையும் கிருமிநாசினி மூலம்சுத்தம் செய்வது கிருமி தொற்றை பெருமளவு கட்டுப்படுத்தும்.

  • மேலும் முகமூடி,கையுறைகள் மிகமிக அவசியம்.


கோவிட் - 19 உடன் உறுதிகொண்டு போராடுவோம்!


ஆசிரியரைப் பற்றி:-


டாக்டர் ராகுல் பத்மநாபன் வயது முதிர்ந்தோர்க்கான சிறப்பு மருத்துவர். கோவையைச் சேர்ந்த இவர் இல்லம் சார்ந்த மற்றும் சமூகம் சார்ந்த முதியோர் நல சேவைகளில் நிபுணர் ஆவார் .டாக்டர் ராகுல்’ஸ் எல்டர் கேர் வயது முதிர்ந்தோர்க்கான எல்லா உடல்நல தேவைகளுக்கும் முழு தீர்வளிக்கும் இடமாய் அமைகிறது.


இந்த பதிவை தமிழில் மொழியாக்கம் செய்தவர் திருமதி. தமிழ் ஏகாம்பரம் - உளவியல் ஆலோசகர் - சென்னை

77 views0 comments

Recent Posts

See All
bottom of page